உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் கோடைகால இயற்கை முகாம்
முத்துப்பேட்டை, ஜூலை 31: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரகம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் திருவாரூர் வனக்கோட்டத்தின் சார்பாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கோடைகால இயற்கை முகாம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். முன்னதாக வனச்சரக அலுவலர் சதீஷ் கண்ணன் வரவேற்றார்.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், ஏவிசி கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரி கிருஷ்ணன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் நடனம் மறவக்காடு வனக்குழு தலைவர் சங்கர், வனவர் சீனிவாசன் மற்றும் வனத்துறை அனைத்து பணியாளர்களும் கலந்துக்கொண்டனர்.
இந்த முகாமில் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பதன் குறித்து விழிப்புணர்வு இயற்கை வளங்கள் பேணி காத்தல் புவி வெப்பமயமாதல் தடுத்தல் வனவிலங்குகள் பறவைகள் பாதுகாத்தல் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடப்பட்டது. மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அச்சுதமங்கலம் செல்லூர் வடகரை அரசு பள்ளிகளைச் சார்ந்த 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வனவர் சீனிவாசன் நன்றி கூறினார்.