முத்துப்பேட்டையில் பொது இடங்களில் விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்
முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டையில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றபேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பு.
முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் மற்றும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறாக கடை வாசலில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் விளம்பர போடுதல் அனைத்தும் 29.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 11மணிக்குள் தாங்களாகவே அப்புறப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது தவறும் பட்சத்தில் முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவல்துறை பாதுகாப்புடன் அனைத்து விளம்பர பதாகைகள் மற்றும் சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் அனைத்தும் அப்புறப்படுத்துவதோடு அதற்கான செலவினங்களையும் ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து வசுல் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறோம் என இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.