வங்கநகர் அரசுப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்
முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை அருகே வங்கநகர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் மாணவர்கள் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
பலரும் அப்துல் கலாம் பற்றி விளக்கி பேசினார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவன் யஷ்வந்த் அப்துல் கலாம் முகமூடி அணிந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.