முத்துப்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
முத்துப்பேட்டை, ஆக.2: முத்துப்பேட்டை அருகே கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை அருகே எடையூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கேந்தி அருகே சந்தேகத்திற்கூறிய வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்றுக்கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த இதயத்துல்லா மகன் முகமது ஹாலிக் (19), பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் பகுதியை சேர்ந்த சேக்தாவூது மகன் அகமது பாசில்(21) மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், 3 பேரிடம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்த பின்னர் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.