காரைக்காலில் இருந்து காரில் கடத்திய டின் பீர்கள் பறிமுதல்
திருவாரூர், ஆக. 2: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காரைக்காலிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட டின் பீர்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேர்களை கைது செய்தனர். இந்நிலையில் நன்னிலம் மதுவிலக்கு அமுல்பிரிவு தலைமை காவலர் கவியழகன் மற்றும் போலீசார் நேற்று கந்தன்குடி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது புதுவை மாநிலம் காரைக்காலிலிருந்து வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.14 ஆயிரம் மதிப்புடைய 48 லிட்டர் அளவிலான 96 டின் பீர் பாட்டில்கள் இருந்ததது தெரியவந்தது. இதனையடுத்து அதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கம்பர்தெருவை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் வெங்கடேஷ் (26) மற்றும் கோவை மாவட்டம் குரும்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விபின்தாஸ் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.