நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
நீடாமங்கலம், ஆக.1: நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் கபடியில் சாதனை படைத்தனர். மன்னார்குடி அளவிலான குறுவட்ட போட்டி மூன்றாவது நாளாக தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. அதில் நடுவராக நாராயண மூர்த்தி, தமிழ்வாணன்,பசுபதி, உதயகுமார், துரையரசன் ,சேகர் நடுவர்களாக பணியாற்றினர்.
அண்டர் 14 சிறுவர்களுக்கான கபடி போட்டியில் 21 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் முன்னவல் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் பெற்று சாதனை படைத்தனர். இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் வீரையன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிக்கு காரணமாக, இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்குமார், பசுபதி ஆகியோரையும் பாராட்டினர்.