வலங்கைமான் வயல்வெளி பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
வலங்கைமான், ஆக.1:வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வேளாண்மை பணி மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மோட்டார் களுக்கு செல்லும் மின் கம்பங்கள் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வான நிலைகள் உள்ளது.
பல இடங்களில் மின்கம்பங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பி தெரியும் வகையில் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் சம்பா சாகுபடி பணிகள் துவங்க உள்ள நிலையில் வயல்வெளி பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் அடையாளம் காணப்பட்டு புதிய மின்கம்பங்கள் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.