தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

 

நீடாமங்கலம், ஆக.1: நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் ரயிலில் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் செயல் பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை, சம்பா ,தாளடி மற்றும் கோடை சாகுபடி செய்த நெல் அறுவடை விற்பனை செய்த நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேகங்களில் அரவைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

சில நேரங்களில் தாலுக்கா பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கோள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி,நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை, திறந்தவெளி சேமிப்பு மையம் ஆதனூர் உள்ளிட்ட இடங்களிலும் சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் தாலுக்கா பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையச்களிலிருந்து 2,000 டன் பொது ரக நெல் மூட்டைகள் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 42 ரயில் பெட்டி வேகன்களில் ஏற்றி அரவைக்கு திருப்பூர் அனுப்பி வைத்தனர்.