பைக் மோதி விவசாயி படுகாயம்
Advertisement
முத்துப்பேட்டை,செப்.22: முத்துப்பேட்டை அருகே பைக் மோதி விவசாயி படுகாயமடைந்தார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி கீழ தெரு கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் மகன் சரவணகுமார்(47) விவசாய கூலித்தொழிலாளியான இவர் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மருந்தியம்மன் கோவில் அருகே பின் பகுதியில் வந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் முருகன்(55) என்பவர் ஒட்டி வந்தஇரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
Advertisement