மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா
மன்னார்குடி, ஆக. 4:மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்தில் வலம்வந்தார். மன்னார்குடியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாமணி ஆற்றங்கரையில் நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு கா விரி தாயை வழிபட்டனர். படித் துறைகளில் மஞ்சள், குங்குமம், காதோலை கருகமணி, கண்ணாடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர்.
பின்னர், பெண்கள் மஞ்சள் கயிறை ஒருவருக்கொருவர் மாற்றி கட்டி மகிழ் ச்சியைக் கொண்டாடினார்கள். வெல்லம் கலந்த பச்சரிசியைத் பிரசாதமாக விநி யோகித்தனர். அதனைத் தொடர்ந்து மங்கல பொருட்களை காவிரியில் கரைத்து வாழ்க்கையை வளமாக்க வேண்டி காவிரி தாயை வணங்கி வழிபட்டனர்.
இந்த நிலையில், பிரசித்தி பெற்ற வைணவத்தலமான ராஜ்கோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு கைலாசநாதர் கோவில் முன்புறம் உள்ள பாமணியாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.