குடவாசல் அருகே சேதினிபுரம் தட்டி பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி
வலங்கைமான், ஆக.4: குடவாசல் ஒன்றியம் சேதினிபுரம் தட்டி பாலம் சேதமடைந்தால் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆற்றில் வீணாகிறது. இதனையடுத்து உடனடியாக பாலத்தை சீர் செய்தும் குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் சிபிஎம் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதினிபுரம் ஊராட்சியில் முடிகொண்டான் ஆற்றில் உள்ள சேதினிபுரம் தட்டி பாலம் முற்றிலும் சேதமடைந்தும் பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது மேலும் பாலத்தின் வழியாக வரும் குடிதண்ணீர் குழாயும் உடைந்து தண்ணீர் வீணாகிறது இதனால் குடிநீர் தட்டுபாடும் ஏற்ப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பாலத்தை சீர்செய்தும், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுயின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக மூங்கில் பாலத்தை சீர் செய்தும், நிரந்தரமாக சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைத்திட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் லெனின் கோரிக்கை விடுத்துள்ளார்.