குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்
தஞ்சாவூர், ஆக 3: குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிப்பு, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தகவல். இது குறித்து அவர் கூறியதாவது: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2024- 25 காரிப் பருவம் குறுவை நெற்பயிர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31ம்தேதி முடிவு அடைவதாக இருந்தது.
இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 14ம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து தஞ்சை மாவட்ட விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.