ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாத பொதுமக்கள் பண்டகமில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்
திருவாரூர், ஜுலை 24: இது குறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க பண்டகமில்லா குடும்ப அட்டை, சர்க்கரை குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை என வழங்கப்பட்டு வருகிறது. பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது உரிமத்தினை விட்டு கொடுக்க விரும்பும் பட்சத்தில் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறையின் வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பண்டகமில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.