திருவாரூரில் ஆடி அமாவாசையையொட்டி கமலாலய குளத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருவாரூர், ஜூலை 25: ஆடி அமாவாசையையொட்டி திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில்ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் கார்த்திகை தினங்கள் புன்னியகாலம் என்று சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால் இந்த தினங்களில் பொது மக்கள் விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று வழிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலின் கமலாலயம் குளத்திலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுமட்டுமின்றி ஓடம்போக்கி ஆறு, வெட்டாறு, பாண்டவையாறு உட்பட பல்வேறு நீர்நிலைகளிலும் பொது மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.