கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்க்க விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் ஜூலை 25:தமிழ்நாட்டில் சொந்தக் கட்டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான பெஞ்சுகள் மற்றும் தேவாலையத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல், சுற்றுசுவர் அமைத்தல் ஆகியவற்றிற்கு தேவாலய கட்டத்தின் வயதிற்கேற்ப 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.10 லட்சமும், 15 முதல் 20 வருடங்கள் வரை இருப்பின் ரூ.15 லட்சமும்,
20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ 20 லட்சமும் வழங்கப்படும்.
தேவாலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கிருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்க கூடாது. மானிய தொகை பெறப்பட்ட பின்னர் 5 வருட காலத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க கூடாது. மேலும் விரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.