முத்துப்பேட்டையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிப்பு
முத்துப்பேட்டை, ஜூலை26: முத்துப்பேட்டையில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். முத்துப்பேட்டை புதுத்தெரு பட்டறைக்குளம் படித்துறை அருகே வசிப்பவர் ஜெகபர் சாதிக் மகன் முகமது சகில்(21) இவர், தனக்கு சொந்தமான விலை உயர்ந்த கேடிஎம் இரு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் நிறுத்துவிட்டு தூங்க உள்ளே சென்று உள்ளார். பின்னர் நள்ளிரவு வெடிக்கும் பயங்கர சத்தமும் வெளிச்சமும் முகமது சகில் கண்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் தீபிடித்து எரிந்துக்கொண்டு இருப்பதை கண்டு அதர்ச்சியடைந்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கும் தீயனைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். ஆனாலும் இரு சக்கர வாகனம் 75சதவிதம் எரிந்துவிட்டது. இதில் எரிந்தபோது பெட்ரோல் டேங் வெடித்த சத்தம் கேட்டுதான் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்து உள்ளனர். மேலும் தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி பிலிப் பிராங்கிளின் கென்னடி, இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது எறிந்த இரு சக்கர வாகனம் அருகே பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து முகமது சகில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில் சம்பவம் நடந்த நேரத்தில் தலையில் துணிப்போட்டு முகத்தை மறைத்து ஒரு மர்ம நபர் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த அந்த மர்ம நபரை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் இரு சக்கர வாகனத்தை தீவைத்து எறிந்த இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது