மேலநம்மகுறிச்சியில் 1,100 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
முத்துப்பேட்டை, ஜூலை 28: முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் மேலநம்மகுறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரிச்சட்ராஜ் மற்றும் கோமாரி தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் விஜயகுமார் துணை இயக்குனர், உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில் இடும்பாவனம் டாக்டர் மகேந்திரன், ஒதியதூர் டாக்டர் காயத்ரி, கால்நடை ஆய்வாளர் நிர்மலா, ஜெகநாநன் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சத்தியசீலன், தமிழ்ச்செல்வி, பிரசன்னா, மகாலட்சுமி, மாதவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 1100மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்தநிலையில் இம்முகாமினை முத்துப்பேட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மகேந்திரன் ஆய்வு செய்தார்.