டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது
போடி, ஜூலை 31: போடி அருகே ரெங்கநாதபுரம் காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (31). இவர் ராணி மங்கம்மாள் சாலையில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது டூவீலரையும், அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரின் டூவீலரையும் ஒர்க் ஷாப்பில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு வாகனங்களும் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் கொடுத்தார்.சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 சிறுவர்கள் டூவீலர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சிறுவர்களின் இருப்பிடம் தெரிய வந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.