பழனிசெட்டிபட்டியில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்
தேனி, டிச. 5: தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் வக்கீல்.மிதுன்சக்கரவர்த்தி தலைமை வகித்தார். செயல்அலுவலர் ராஜேஸ்அய்யனார்முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணை சேர்மன் மணிமாறன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தேனி போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமார் கலந்து கொண்டு...
கால்வாயில் விழுந்த பசு மாடு மீட்பு
வத்தலக்குண்டு, டிச. 5: வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று தனது மாடுகளை வைகை பாசன கால்வாய் அருகே கயிற்றால் கட்டி அருகிலிருந்த புல்லை மேய விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பசு மாடு கால் வழுக்கி தண்ணீர் ஓடி கொண்டிருந்த பாசன கால்வாயில் விழுந்தது. இதை கண்ட அருகில்...
கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தேனி, டிச.4: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சித் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரகுரு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தங்கவேலு, தேனி நகரச் செயலாளர் பரமன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் அருந்தமிழ் அரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் 1958ம் ஆண்டு...
பெரியகுளம் அருகே சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பெரியகுளம்,டிச.4: பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கைலாசநாதர் கோயில் நுழைவாயிலில் உள்ள வரவேற்பு வளைவில் ஒரு சமுதாயத்தின் பெயரை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. பெரியகுளம் அருகே கைலாசம்பட்டி உள்ளது. கைலாசம்பட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் முன்புறம் வரவேற்பு வளைவு உள்ளது. இந்த...
தேனி,பெரியகுளத்தில் நள்ளிரவு முதல் கனமழை
தேனி, டிச.4: தேனி மற்றும் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கி அதிகாலையிலும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் டிட்வா புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகலில் மழை இல்லாத நிலையில், நள்ளிரவு 12 மணி...
கம்பத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
கம்பம், டிச.3: கம்பத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் எல்.எப்.மெயின்ரோடு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(30). இவர் தனது வீட்டின் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக தண்ணீர் மோட்டாரை...
அசுரவேகத்தில் பறக்கும் தனியார் பஸ்களால் ஆபத்து
தேனி, டிச.3: தேனி மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டை விட்டு கிளம்பியதும் மெயின் ரோட்டை பிடித்ததும் கண் மூடித்தனமான வேகத்தில் சில தனியார் பஸ்கள் இயங்குகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் தனியார் பஸ்களை கடந்து செல்கின்றனர். சில தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. அரசு பஸ்களில்...
போடியில் குடிநீர் குழாய் சீரமைப்பு
போடி, டிச.3: போடியில் சேதமடைந்த குடிநீர் குழாயினை, நகராட்சி பணியாளர்கள் விரைந்து சீரமைத்தனர். போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு தெரு பிரிவில், திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி...
சின்னமனூரில் தொடர் மழை
சின்னமனூர், டிச. 2: தமிழகத்தில் டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா மாநிலம் நோக்கி புயல் கரையை கடப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தூறல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில்...