கூடலூர் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
கூடலூர், ஆக. 1: கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களால் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி கூடலூர் நகர் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், வயதான முதியவர்களும், அதிகாலை, இரவு வேலைக்குச் சென்று திரும்புவோரும் தெரு நாய்களால் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
அவ்வப்போது குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நாய்கடிக்கு உள்ளாகின்றனர். எனவே, நகர் மற்றும் புறநகர் பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.