விளையாடிக்கொண்டிருந்த போது தொட்டில் கயிறு இறுக்கி 10 வயது சிறுவன் சாவு: தேனியில் சோகம்
தேனி, ஜூலை 29: தேனியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான். தேனி நகரில் உள்ள சிவராம்நகரில் குடியிருப்பவர் ஸ்ரீதர் மகன் ஜெயபாரதி(31). இவர் தனியார் ஆங்கிலப் பள்ளியொன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீபாலாஜி(10) இப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை இவர்களுடைய வீட்டில் உள்ள ஹாலில் உள்ள சீலிங்கில் கட்டியிருந்த தொட்டில் கயிற்றில் சிறுவனின் கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்தான்.
இச்சிறுவனை மீட்ட பெற்றோர், சிறுவனை மீட்டு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டான் எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாய் ஜெயபாரதி அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.