பெரியகுளத்தில் விசிக பொதுக்கூட்டம்
தேனி, ஜூலை 29: தேனி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெரியகுளம் நகர் மதுரை சாலையில், விசிக கட்சியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக், சார்பு அணி நிர்வாகிகள் மது, தொல்தளபதி முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி செயலாளர் சுசி.தமிழ்பாண்டியன் வரவேற்றார்.
இதில் கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, மாவட்ட மேலிட பொறுப்பாளர்கள் செல்வஅரசு, நாகரத்தினம், மண்டல செயலாளர் தமிழ்வாணன் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் விடுதலை இயக்க நகர செயலாளர் ஈஸ்வரி நன்றி கூறினார்.