சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல்
தேவதானப்பட்டி, ஜூலை 29: தேவதானப்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(45). இவரது பூர்வீக சொத்து மஞ்சளாறு அணை செல்லும் வழியில் உள்ளது. இவருக்கும் இவரது சித்தப்பா கோட்டைராஜ் என்பவருக்கும் தோட்டத்திற்கு செல்வதில் பாதை பிரச்னை இருந்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்ற கோட்டைராஜ் வீட்டில் இருந்த முத்துப்பாண்டி மனைவி பாண்டியம்மாள்(37) என்பவரை தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த முத்துப்பாண்டியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாண்டியம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் கோட்டைராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.