டூவீலர் மோதி வாட்ச்மேன் சாவு
திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் அருகே பொன்னகரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (55). இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் நத்தம்- திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்டு செல்வம் மற்றும் நிலைதடுமாறி விழுந்த ஜெகதீஷ் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்வம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ கிருஷ்ணவேணி, சிறப்பு எஸ்ஐ வனராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.