சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
கம்பம், ஜூலை 25: சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அருகே பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. இந்த அருவி புண்ணிய தீர்த்தமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரளான மக்கள் குவிந்தனர். கடந்த 5 நாட்களாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்த காரணமாக பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் நேற்று காலை அனுமதி அளித்தனர். இதனால் சுருளி அருவி முழுவதும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்கிடையில் மதியம் ஒரு மணிக்கு சுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.