டூவீலர் மீது ஆட்டோ மோதல்
போடி, ஜூலை 28: போடி அருகே பூதிப்புரம் ஆதிபட்டியை சேர்ந்தவர் கணேசன்(40). இவர் நேற்று முன் தினம் மாலை தனது டூவீலரில் 2 பெண் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு நாகலாபுரத்தில் இருந்து டொம்புச்சேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பெருமாள்கவுண்டன்பட்டி சந்திப்பில் சென்ற போது எதிர்திசையில் வந்த ஆட்டோ டூவீலரில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு டூவீலரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரில், போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த மல்லிகாபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்த மணிமாறனை கைது செய்தனர்.