வகுப்பறைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
தேவதானப்பட்டி, ஜூலை 25: சில்வார்பட்டி ஊராட்சிமன்றம் அருகே செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையில் 5அடி நீளமுள்ள நல்லபாம்பு மாணவர்களை பார்த்ததும் சீரி சத்தமிட்டது.
இதை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியை சுதாரித்து வகுப்பறையை விட்டு வெளியே அலறியடித்து ஓடிவந்துவிட்டனர். பின்னர் ஆசிரியர்கள் பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்து சென்றனர்.