கும்பகோணம் மாநகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
கும்பகோணம், ஆக 2: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 1வது பகுதி ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 1வது பகுதி திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் அய்யன் தெருவில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. பகுதி செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
மாநகர திமுக செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 1வது பகுதிக்குட்பட்ட 12 வார்டுகளில் திறம்பட உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு, நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை விரைவாக அடைய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர் பிரியம் சசிதரன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் அனந்தராமன், வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.