மாநில அளவிலான சிலம்பம் போட்டி அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம்

பேராவூரணி, டிச.8: சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பேராவூரணி அருகே உள்ள களத்தூர் ஊராட்சி சித்துக்காடு அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஓவியா, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 2ம் இடம்...

தஞ்சை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பேரவை கூட்டம்

By Ranjith
12 hours ago

தஞ்சாவூர், டிச.8: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க 9வது மாவட்ட பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கோட்ட தலைவர் ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திரவியராஜ், மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க...

திருச்சி வானொலியில் தனித்திறன்களை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

By Ranjith
12 hours ago

பேராவூரணி, டிச.8: பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர். செருவாவிடுதி உடையார் தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளஞ்சியம்,...

ஆடுதுறை பகுதியில் 9ம் தேதி மின்தடை

By Arun Kumar
06 Dec 2025

  கும்பகோணம், டிச.7: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆடுதுறை துணை மின் நிலையத்தில் வரும் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  இதனால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், கஞ்சனூர், திருலோகி, சாத்தனூர்,...

தஞ்சை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.41.40 லட்சத்தில் பொது விநியோக கட்டிடங்கள்

By Arun Kumar
06 Dec 2025

  தஞ்சாவூர், டிச.7: தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட 49வது வார்டு முனிசிபல் காலனி 7ம் தெரு மற்றும் 40வது வார்டு யாகப்பா நகர் மற்றும் அருளானந்தமாள் நகரில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடங்களை திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு...

பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட இயக்குனர் ஆய்வு

By Arun Kumar
06 Dec 2025

  தஞ்சாவூர், டிச.7: பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் தியாக சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார கட்டிடம், சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ்...

பேராவூரணியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By Arun Kumar
05 Dec 2025

  பேராவூரணி, டிச.6: பேராவூரணி பெரியார் சிலை அருகே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திக மாவட்ட செயலாளர் மல்லிகை சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் அருநல்லதம்பி, மாவட்ட தலைவர் வீரையன், மாவட்ட துணைச் செயலாளர் சோமநீலகண்டன் ஆகியோர்...

தஞ்சை பெரியகோயிலில் நடிகை ஸ்ருஷ்டி, நடிகர் துரை.சுதாகர் சாமி தரிசனம்

By Arun Kumar
05 Dec 2025

  தஞ்சாவூர், டிச.6: நடிகை ஸ்ருஷ்டி, நடிகர் துரை.சுதாகர் நேற்று தஞ்சை பெரிய கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தர்மதுரை, கத்துக்குட்டி, டார்லிங் உள்பட பல படங்களில் நடித்து உள்ள நடிகை ஸ்ருஷ்டி மற்றும் நடிகர் துரை.சுதாகர் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பெருவுடையார், வராகி அம்மன்,...

ரூ.27 லட்சம் மதிப்பிலான அறநிலையத்துறை நிலங்கள் மீட்பு

By Arun Kumar
05 Dec 2025

  திருக்காட்டுப்பள்ளி, டிச.6: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் பழமார்நேரி வருவாய் கிராமத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான தண்ணீர் பந்தல் தர்மத்திற்கு அளிக்கப்பட்டு, தனியார் வசம் இருந்த (நன்செய் மற்றும் புன்செய்) 6.02 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட துறை நில அளவையரை கொண்டு பணி மேற்கொள்ளப்பட்டது. ...

அரசு பள்ளிக்கு ரூ.27 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பள்ளி மாணவிகளை கொண்டு திறந்து வைத்த எம்எல்ஏ

By Arun Kumar
04 Dec 2025

  கும்பகோணம், டிச.5: கும்பகோணம் தொகுதி விளந்தகண்டம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நிறைவு பெற்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்று அந்த பள்ளியில்...