ஆடிப்பெருக்கை முன்னிட்டு தஞ்சையில் பூக்கள் விலை கடும் உயர்வு
தஞ்சாவூர், ஆக 3: ஆடிப்பெருக்கை முன்னிட்டு தஞ்சையில் பூக்கள் விலை கடும் உயர்வு. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆடி மாதம் இந்து மதத்தில் புனித மாதமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு நாளில், நீர் நிலைகளை போற்றி வழிபடுவதும், சுப காரியங்களை தொடங்குவதும் நல்லதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் அதிகளவில் பூக்களை பயன்படுத்துவதால், அதன் தேவை அதிகரிக்கிறது. இதனால், பூக்களின் விலை வழக்கத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, தஞ்சை பூக்கார தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள பூச்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1000-க்கும், முல்லைப்பூ ரூ.1000க்கும், செவ்வந்தி ரூ.600க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ.400க்கும், செண்டுப்பூ ரூ.200க்கும், சந்தன முல்லை ரூ.1500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், பன்னீர் ரோஸ் ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.2000க்கும், கோழிக்கொண்டை ரூ.150க்கும், சம்பங்கி ரூ.500க்கும், நந்நியாவட்டை ரூ.250க்கும், தாமரை ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், ஸ்பெஷல் அரளி ரூ.400க்கும், மாசிப்பச்சை ரூ.40க்கும், ஜாதிப்பூ ரூ.1000க்கும் விற்பனையாகிறது.விலை அதிகரித்தாலும் பூக்களின் தேவை இருப்பதால் மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.