ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் மாயம்
ஒரத்தநாடு, ஆக. 3: ஒரத்தநாடு அருகே ஆற்றில் நண்பர்களோடு குளிக்க சென்ற இன்ஜினியரிங் படித்த பட்டதாரி இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து மாயம். மாயமான இளைஞரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் கார்த்திக் (21) பிஇ இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் நேற்று மதியம் நண்பர்களோடு பெட்டிக்காடு ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த பொழுது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை ஒரத்தநாடு தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவோணம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் அடித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.