வாகனங்கள் செல்ல முடியாமல் பேரிகார்டு வைத்து மூடல்
தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் போக்குவரத்து நிறைந்த பகுதி ஆகும். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், மருத்துவமனை, பெரிய கோவில், ராஜப்பா பூங்கா, சிவகங்கை பூங்கா உள்ளிட்டவை இயங்கி வருகிறது. மேலும் தஞ்சை கீழவாசல் பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலை பகுதியில் கடந்த ஒரு மாதம் முன்பு வரை அந்த பகுதியில் வாகனங்கள் சென்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதி பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் நீண்ட தூரம் சென்று திரும்பி வர வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு சென்று வரும் போது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.
மேலும் கிழவாசல், கரந்தை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் அண்ணாசாலை வழியாக செல்ல முடியாமல் ஆற்றுபாலம் வந்து சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அண்ணாசாலை அருகே உள்ள மருத்துவமனைக்கு ஊரையே சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது உள்ளது. அதேபோல் அவசர தேவைக்காக வரும் தீயணைப்பு வாகனமும் சுற்றி வருகிறது. மேலும் இரு சக்கர வாகனமும் செல்ல முடியாமல் உள்ளது. எனவே முன்பு இருந்ததை போன்று அண்ணாசாலை பகுதியில் உள்ள பேரிகார்ட்டை நீக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.