நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தஞ்சாவூர், ஜூலை 30: நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதனை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம் ஆகியோர் குத்து விளக்கு ஏத்தி தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் அருளானந்த சாமி , செல்வகுமார், அவைத் தலைவர் கோவிந்தராஜ், நாஞ்சிக்கோட்டை ராஜா, கோவிந்தராஜ், கண்ணன், துரை, தமிழரசன், பழனியப்பன், ரவி, லாரன்ஸ், பெஞ்சமின், முத்தமிழ் செல்வன், வண்டார் குழலி உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் கலந்து கொண்டனர்.