கும்பகோணம் அருகே மாநில அளவிலான வில்வித்தை போட்டி
கும்பகோணம், ஜூலை 28: கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயதின் அடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு 5 பிரிவுகளாக பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பிரிவின் அடைப்படையில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.