கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கலைநிகழ்ச்சி
கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க புதுகை பூபாளம் கலைக்குழு பிரச்சார கலை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க புதுகை பூபாளம் கலைக்குழு பிரச்சாரம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்.பி ராமலிங்கம், மாநகர நிர்வாகிகள் வாசுதேவன், பிரியம் சசிதரன், ரவிச்சந்திரன், சிவானந்தம் மற்றும் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் வரவேற்றார். இந்த கலை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர அணியின் அமைப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.