தஞ்சை மாவட்டத்தில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
தஞ்சாவூர், ஜூலை 25: இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களை முன்னிட்டு 31.07.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக கீழ்தளத்தில் உள்ள, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.