பூதலூர் அருகே புதுஆற்றில் முதியவர் சடலம் மீட்பு
திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 24: வைரப்பெருமாள்பட்டி புதுஆற்றுப்பாலம் அருகில் ஆற்றில் ஒரு சடலம் மிதந்து செல்வதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் நிகழ்விடம் வந்து சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் கிளியூர் கள்ளர் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் செல்லத்துரை (65) என்பது தெரியவந்தது. பூதலூர் காவல் ஆய்வாளர் முகமது இப்ராஹிம் சடலத்தை கைப்பற்றி பூதலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.