ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, டிச.5: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு திராவிடர் கழகம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.ரவியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் இன்பலாதன், மாவட்ட செயலாளர் ராஜாராம் முன்னலை வகித்தனர். திமுக மாநில கொள்கை பரப்பு துணை...
திருப்புவனத்தில் நாளை மின் நிறுத்தம்
திருப்புவனம், டிச.5: திருப்புவனம், நெல்முடிகரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதனால் திருப்புவனம் ,புதூர், அல்லிநகரம், நைனார்பேட்டை, மடப்புரம், வடகரை, பூவந்தி, லாடனேந்தல், பாப்பான்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், கீழடி, மணலூர் கொந்தகை, செங்குளம் பகுதிகளில் நாளை காலை 10மணி முதல் மதியம் 5 மணி...
மண்டபம் அரசு பள்ளியில் மழைநீர் வெளியேற்றும் பணி 2வது நாளாக தீவிரம்
மண்டபம், டிச. 4: மண்டபத்தில் பெய்த கனமழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் 2வது நாளான தீவிரமாக ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மண்டபம் பேரூராட்சியில் டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த நவ.26ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களாக கடுமையான...
விதிமுறைகளை கடைப்பிடிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம்
பரமக்குடி, டிச.4: பரமக்குடியில் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். பரமக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயணிகளை ஏற்றுச் செல்லும் ஆட்டோ, மினி பேருந்து உள்ளிட்ட 40 வாகனங்கள் பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில்...
திருவாடானை அருகே மகளிர் சுகாதார வளாகம் சேதம் புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை
திருவாடானை, டிச.4: திருவாடானை அருகே முட்புதர்கள் மண்டி சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே பாண்டுகுடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த...
திருப்புத்தூரில் கார்த்திகை விளக்குகள் விற்பனை ஜோர்
திருப்புத்தூர், டிச.3: திருப்புத்தூரில் கார்த்திகை தீபசட்டி விற்பனை ஜோராக நடைபெறுகிறது. கடந்த நவ.17ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. இன்று திருகார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், சிலர் கார்த்திகை மாதம் பிறந்த முதல்நாளே வீட்டில் கார்த்திகை விளக்கில் தீபம் ஏற்றினர். இந்நிலையில், நாடு முழுவதும் திருகார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும், கடைகளிலும் தீபம்...
வாலிபர் கொலையில் குண்டாசில் 5 பேர் கைது
சிவகங்கை,டிச.3: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 5பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை பிள்ளைவயல் ஆர்ச் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் ராஜேஸ்(20). கடந்த மாதம் 1ம் தேதி இரவு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தபோது ராஜேஷை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம்...
ஆண் சடலம் மீட்பு
ராமேஸ்வரம்,டிச.3: மழை நீரில் மூன்று நாட்களாக மூழ்கிக் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை நகர் பகுதியில் தேங்கி கிடக்கும் மழை நீருக்குள் ஆண் சடலமாக கிடப்பதாக பாம்பன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து அங்கு சென்ற போலீசார், அடையாளம் தெரியாத...
பெண் ஓட்டுநர்களுக்கு மானியத்தில் ஆட்டோ வழங்க முகாம்
ராமநாதபுரம், டிச.2: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல சங்கம் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்க ஏற்பாடு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பெண் ஓட்டுநர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கும்...