பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு: அம்மன்குறிச்சி ஊராட்சியில் திமுகவின் விடியல் விருந்து
பொன்னமராவதி, ஜூலை 26: பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி ஊராட்சியில் திமுகவின் விடியல் விருந்து நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட திமுக, திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி, நேற்று 53 வது நாளாக பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் அம்மன்குறிச்சி ஊராட்சி அம்மன்குறிச்சியில் பொதுமக்களுக்கு பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், நகரச்செயலாளர் அழகப்பன், மற்றும் நிர்வாகிகள் விடியல் விருந்தினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் அழகப்பன்அம்பலம், பழனிச்சாமி, மணிகண்டன், சாமிநாதன், இளையராஜா, தட்சணாமூர்த்தி,ஆலவயல் முரளிசுப்பையா, சுந்தரிராமையா, சுரேஷ்பாண்டி, மச்சக்காளை, சீமாட்டிலத்திப், கதிரேசன், தேனூர் சின்னையா,வாழைராஜன், சுரேஷ், சரவணன், சேகர் உட்படபலர் கலந்துகொண்டனர்.