சட்டசேவை குழுக்களுக்கு தன்னார்வலர்களாக சேவை
புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சட்டசேவை குழுக்களுக்கு சேவைபுரிய படைவீரர்கள் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் வட்ட அளவிலான சட்ட சேவை குழுக்களுக்கு (தன்னார்வலர்கள்) சேவை புரிய விருப்பமுடைய முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. படைவீரர்கள் எனவே, இச்சேவை புரிய விருப்பமுடைய புதுக்கோட்டை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இது தொடர்பாக விவரங்கள் தேவைப்படின் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.