புதுக்கோட்டை மாநரக பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்பதை அந்தெந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி; தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் புதுக்கோட்டை மாநகரம் வடக்குப் பகுதியில் நடந்த நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளர் லியாகத் அலி, உள்ளிட்ட நிர்வாகிகள் பரப்புரை மேற்கொண்டனர்.