கீரனூர் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 84 ஆயிரம் பறிமுதல் செய்து, சார்பதிவாளர், தரகர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.84 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தொடர்பாக கணக்கு எதுவும் இல்லை. இந்நிலையில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இதுதொடர்பாக கீரனூர் சார்- பதிவாளர் மகேஷ், தரகர் ராசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செயய்ப்பட்டுள்ளது.