விராலிமலை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
விராலிமலை, ஆக. 1: விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ராஜாளி பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானதிராயன்பட்டி ஊராட்சி மேடு காட்டுப்பட்டி யைச் சேர்ந்த பிரபாகரன்(29) என்பவர் அவரது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.