உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
புதுக்கோட்டை, ஆக.1: புதுக்கோட்டையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 9 ,10ம் வகுப்பிற்கு பாடம் கற்பிக்கும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவித்திட்ட அலுவலர் செந்தில் , முதுநிலை விரிவுரையாளர் பழனிச்சாமி உடனிருந்தனர். பயிற்சியின் கருத்தாளராக விரிவுரையாளர்கள் சங்கரன், சசிகலா, பட்டதாரி ஆசிரியர் ஜெயராமன் ஆசிரியப்பயிற்றுநர் அழகேசன் ஆகியோர் செயல்பட்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன்ஆகியோர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர் ராஜ்கமல் செய்திருந்தனர். பயிற்சியில் 113 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான சான்றிதழ் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள், கல்வி உதவித் தொகை, ஐடிஐ, பாலிடெக்னிக் தொடர்பான படிப்புகள் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது.