புதுகை கம்பன் விழா நிறைவு
புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50ஆம் ஆண்டுப் பொன் பெருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50ஆம் ஆண்டுப் பொன் பெருவிழா கடந்த ஜூலை 18ஆம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தினமும் மாலை 5.30 மணிக்கு நகர்மன்றத்தில் நடைபெற்ற இந்தப் பொன் பெருவிழாவில், மாநிலம் முழுவதும் உள்ள கம்பன் சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
10 நாட்கள் நடைபெற்ற பொன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை நடைபெற்றது. கம்பன் கழகத்தின் தலைவர் எஸ் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இலங்கையின் திலகமாய்த் திகழ்ந்த பாத்திரம் கும்பகர்ணனா, வீடணனா, இந்திரஜித்தனா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர் தலைமை வகித்தார். முன்னதாக, கழகத்தின் செயலர் புதுகை. பாரதி வரவேற்றார். முடிவில் கழகத்தின் துணைப் பொருளாளர். ராமசாமி நன்றி கூறினார்.