வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி
விராலிமலை, ஜூலை 26: குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டத்தில் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ஆயிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 3வது நாள் முகாமில் தீயணைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிலைய அலுவலர் ம.மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் க.வேங்கட லட்சுமி மற்றும் உதவி பேராசிரியர் கே.ஆர். சரவணன் பங்கேற்றனர். இதில், திடீர் தீயை எவ்வாறு அணைப்பது, முதலுதவி செய்வது எப்படி, பாம்பு கடி,தீக்காயம் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி,வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் களை காப்பாற்றுவது என்பது குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.