திமுக விடியல் விருந்து
பொன்னமராவதி, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்ட திமுக, திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி துணைச்செயலாளர் அண்ணாமலை ஒருங்கிணைப்பில் திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் கல்லம்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன், மற்றும் நிர்வாகிகள் விடியல் விருந்தை நேற்று தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சோமையா, காடன் நிர்வாகிகள் மச்சக்காளை, ஆலவயல் சாமிநாதன், இளையராஜா, தட்சணாமூர்த்தி, சாமிநாதன், சுந்தரிராமையா, சுரேஷ்பாண்டி, சங்கர், செல்வம், சுரேஷ் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.