தா.பழூர் பகுதியில் திடீர் மழை வயல்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் நனைந்து சேதம்
தா.பழூர், ஆக.4: தா.பழூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் வயல்களில் குவி்த்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல்கள் நனைந்து வீணானது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் காரைக்குறிச்சி, ஸ்ரீ புரந்தான், அருள்மொழி, அறங்கோட்டை, முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோடாலி கருப்பூர், இடங்கண்ணி, அடிக்காமலை, கீழ குடிகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் பாசனம் மூலம் சுமார் 1500 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் சித்திரை கார் சாகுபடி நெல் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நெல் மணிகள் கதிர் முற்றிய நிலையில் விவசாயிகள் நெல் அறுவடை துவங்கியுள்ளனர்.