கோத்தகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு தலைமை கொறடா, கலெக்டர் நேரில் ஆய்வு
கோத்தகிரி, ஜூலை 25: கோத்தகிரியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அரசு தலைமை கொறடா, கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்,
பொதுமக்களுக்கு செய்த அடிப்படை வசதிகள், சக்கர நாற்காலி, இ-சேவை மற்றும் ஆதார் பதிவு, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் இடம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பொது மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளையும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட அரங்கம் உள்ளிட்ட அரசுத்துறை அரங்கங்களையும் நேரில் பார்வையிட்டு அரசு தலைமை கொறாடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்தனர்.
இதில் கோத்தகிரி நகராட்சி ஆணையர் மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சிவசங்கர், கோத்தகிரி வட்டாட்சியர்கள் ராஜலட்சுமி, ராஜசேகரன்(சமூக பாதுகாப்பு திட்டம்), கோத்தகிரி நகர்மன்ற தலைவர் ஜெயகுமாரி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.