நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக கிராம மக்கள் புகாரால் பரபரப்பு
குன்னூர், டிச.10: குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் மரங்கள் வெட்டுவதற்கும், பாறைகள் உடைப்பதற்கும் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர்....
ஊட்டி பைன் பாரஸ்ட்டை காண கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டி, டிச. 10: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அண்டை மாநிலமான கர்நாடக மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வழக்கமான சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்காமல் இயற்கை எழில்...
சித்தோடு அருகே கத்தியை காட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
பவானி, டிச. 9: சித்தோடு அருகே பைக்கில் சென்ற வாலிபரிடம், கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சித்தோட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (27). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு ஈரோடு-சத்தி ரோட்டில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பவானி ரிங்ரோடு பிரிவு அருகே வந்தபோது, பைக்கை வழிமறித்த...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஸ்டார்கள் விற்பனை துவங்கியது
ஊட்டி, டிச. 9: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊட்டி மார்க்கெட்டில் ஸ்டார்கள், மரங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை அனைத்து கிறிஸ்துவ மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வீடுகளின் மேல் வண்ண வண்ண ஸ்டார்களை ஒளிர விட்டும்,...
நகை பறித்த வழக்கில் பழங்குற்றவாளி கைது
ஈரோடு, டிச.9: மொடக்குறிச்சி துய்யம்பூந்துறை பறையன்காட்டு வலசை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் வெற்றிவேல் (30). இவர் கடந்த 6ம் தேதி இரவு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே காளை மாட்டு சிலை பகுதியில் குடிபோதையில் சாலையோரம் விழுந்து கிடந்தார். அப்போது அங்கு வந்த நபர், வெற்றிவேல் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க...
குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
கோத்தகிரி,டிச.8: கோத்தகிரி அருகேயுள்ள ஒரசோலை பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் காமராஜர் நகர், அண்ணா நகர், பூபதி ஊர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை உலா வருவது தொடர்கிறது....
புதிய கிளை நூலக கட்டுமான பணிகள் துவக்கம்
கூடலூர்,டிச.8: கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகம் அருகில் கடந்த 1980ம் ஆண்டில் கட்டப்பட்ட கூடலூர் கிளை நூலகத்தின் பிரதான கட்டிடம் கடந்த 2022ம் ஆண்டில் பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் இருந்த பல ஆயிரக்கணக்கான நூல்கள் மழை நீரில் சேதம் அடைந்தன. தற்போது இந்த கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில்...
மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்
ஊட்டி, டிச.8: ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் மேரா யுவ பாரத் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கைப்பந்து, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்...
அதிகரட்டியில் நாளை மின்தடை
ஊட்டி, டிச. 7: அதிகரட்டி துணை மின்நிலையத்தில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தாநாயகி கூறியிருப்பதாவது: ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை 8ம்தேதி (திங்கள்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி...